சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று (மார்ச் 26) ரூபாய் 40 குறைந்து ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 குறைந்து ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூபாய் 54,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 குறைந்து ரூ.6,764-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 30 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூபாய் 5௦,௦௦௦ எட்டிப் பிடித்த தங்கம் விலையானது இன்று சவரனுக்கு ரூபாய் 40 மட்டுமே குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா குறைந்துள்ளது.
பெயருக்கு தங்கத்தின் விலை குறைந்துள்ளதே தவிர, இதனால் பெரிதாக நகை வாங்குபவர்களுக்கு எந்த பயனுமில்லை. எனவே இன்னும் சற்று நன்றாக தங்கம் விலை குறையும்வரை காத்திருந்து நகைகள் வாங்குவது நல்லது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லவ்வர் பாய் விஜய் ஆண்டனி.. ரோமியோ டிரைலர் எப்படி?
“இனி பாஜக ஆட்சி அமைந்தால் இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது” : அகிலேஷ் யாதவ்
ராம் சரணுடன் இணைந்த புஷ்பா இயக்குநர்!