சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (ஏப்ரல் 1) சவரனுக்கு ரூபாய் 680 அதிகரித்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 85 அதிகரித்து ரூ.6,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.744 அதிகரித்து ரூபாய் 56,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 93 அதிகரித்து ரூ.7,042-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூபாய் 5௦,௦௦௦ தாண்டியும் தங்கம் விலை தொடர்ந்து உயருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அதேநேரம் வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 6௦ பைசா அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 6 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து ஏறுமுகமாக தங்கத்தின் விலை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. எனவே தற்போதைய சூழலில் நகைக்கடை பக்கம் போகாமல் இருப்பதே நல்லது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகமும் போதையும்… மோடி காட்டம்!