கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்க ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கமாக செவ்வாய்க்கிழமை வார விடுமுறை என்ற நிலையில், கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்த மே மாதம் முழுக்க வரும் விடுமுறை நாட்களான 9, 16, 23, 30 ஆகிய தேதி (செவ்வாய்க்கிழமை)களிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மே மாதம் 2ஆம் (செவ்வாய்க்கிழமை) தேதி உயிரியல் பூங்கா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்டதும் சளி… தீர்வு உண்டா?