தமிழ்நாட்டில் இன்று போதைப்பொருள் ஒரு பெரும் பிரச்சனையாக நம் முன்னே நிற்கிறது என்று தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேள்வி:
உங்கள் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஊழல் பற்றி பேசி வருகிறீர்கள். இவை 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. இன்றும் இவை இந்திய மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?
பதில்:
இந்திய குடிமக்கள், இந்த ஊழல் முதலிலேயே தடுக்கப்பட்டிருந்தால் இந்தியா எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கும்? என்று நினைக்கிறார்கள். இந்த ஊழல் அப்போது நடந்தது, அதைப்பற்றி இப்போது பேசுவதில் என்ன பயன் என நினைக்க மாட்டார்கள்.
ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களை தலைவர்களாக அமரவைத்து நாட்டை வழிநடத்திய சிலர், இன்று ஊழல்வாதிகளை காப்பாற்ற பேரணி நடத்துகிறார்கள்.
அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால் போதைப்பொருள் விற்பவர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்று போதைப்பொருள் ஒரு பெரும் பிரச்சனையாக நம் முன்னே நிற்கிறது.
பணம் சம்பாதிக்க போதைப்பொருள் விற்கப்படுகிறது. அந்த பணப்பரிமாற்றத்தை அமலாக்கத்துறை தடுக்கிறது என்றால் அமலாக்கத்துறைக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாரிசு அரசியல் என்பது… மோடி கொடுத்த விளக்கம்!
ஹெல்த் டிப்ஸ்: ஆழ்ந்த உறக்கத்துக்கு இதை பின்பற்றினால் போதும்!