வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்!

Published On:

| By Selvam

o panneerselvam writes letter to pm modi

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.

இந்தநிலையில், சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை – விஜயவாடா, சென்னை – நெல்லை உள்ளிட்ட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை துவக்கி வைத்ததற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ரயில் தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக பயண தொலைவை குறைக்கிறது. கன்னியாகுமரி வரை வந்தே பாரத் ரயில் நீட்டிக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்

செல்வம்

சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!

கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel