Rajesh Das Sexual harassment case

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி!

தமிழகம்

பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யவும், சரணடைய விலக்களிக்கவும் கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி இன்று (ஏப்ரல் 23) செய்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதனை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி, ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தனக்கெதிராக சதி செய்யப்பட்டுப் பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும், உயர் பொறுப்பில் இருந்த தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அது மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் வாதிட்டார்.

அப்போது சிபிசிஐடி சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் குறுக்கிட்டு, ”காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஷ் தாஸ் கூறுகிறார். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயரதிகாரி தானே?” என்று கேள்வியெழுப்பினார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு வந்தது.

அப்போது தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட  ராஜேஷ் தாஸின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை சித்திரை திருவிழாவில் கத்திகுத்து : ஒருவர் கொலை!

Gold Rate: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0