மின் இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31-ஆம் தேதி வரை இணைக்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிசம்பர் 15) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் உள்ள 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புகளில் இதுவரை 1 கோடியே 3 லட்சம் பேர், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள்.
இணையதளம் வாயிலாக 60 லட்சம் பேரும், சிறப்பு முகாம்களில் 52 லட்சம் பேரும் இணைத்துள்ளார்கள். இந்த மாதம் இறுதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரை 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 25-ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இருக்காது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.அதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
கடந்த கால ஆட்சி காலத்தின் செலவினங்களை சீரமைக்கும் பணியில் தமிழ்நாடு மின்வாரியம் செயல்பட்டு வருகிறது.
ஆதார் எண் இணைப்பு என்பது ஏற்கனவே உள்ள மின் இணைப்பு விநியோகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் பொதுமக்களும், வணிகர்களும், தொழில் முனைவோர்களும் எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை.
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக சிறப்பாக செயல்பட்டதைப் போல,
அமைச்சர்களுக்கும் முன்னுதாரணமாக செயல்படக்கூடிய வகையில் அவரது பணி அமையவேண்டும் என்று அமைச்சர்கள் அனைவரும் நேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
செல்வம்
மெரினா காந்தி சிலை இடமாற்றம்: தமிழக அரசு ஒப்புதல்!
குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு அவகாசம்!