ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி இன்று (ஆகஸ்ட் 27) அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் 3 தமிழக வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
சீனாவில் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதில் ஹாக்கி, தடகளம், கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
அதில் 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்க உள்ள ஒவ்வொரு போட்டிக்கான வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள 22 பேர் கொண்ட இந்திய மகளிர் கால்பந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சவுமியா, இந்துமதி மற்றும் சந்தியா என மூன்று வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
🚨 Indian Women's Team Squad for #19thAsianGames 🔊
Details 👉 https://t.co/1yEecvZaYv#BackTheBlue 💙 #BlueTigresses 🐯 #ShePower 👧 #IndianFootball ⚽ pic.twitter.com/LE2XgFqBvX
— Indian Football Team (@IndianFootball) August 27, 2023
இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகளின் விபரம்:
ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பாந்தோய் சானு, ஆஷா லதா தேவி, ஸ்வீட்டி தேவி, ரிது ராணி, தலிமா சிப்பர், அஸ்தம் ஓரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்ஃபோர், பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன், அஞ்சு தமாங், சௌமியா குகுலோத், டாங்மேய் கிரேஸ், பியாரி சாக்ஸா, ஜோதி, ரேணு, பாலா தேவி, மனிஷா, சந்தியா ரங்கநாதன் ஆகிய 22 பேர் இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
களைகட்டும் ஓணம்: குத்தாட்டம் போட்ட கேரள கலெக்டர்!
பாமக பொதுக்கூட்டம் : அனுமதி மறுப்பு!