உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது.
இந்ததொடரில் 2வது முறையாக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற லட்சிய கனவுடன் இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு இத்தொடருக்கான 15 பேர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பையில் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மித வேகப்பந்து வீச்சாளராக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் போடும்போது அதைப் பிரிப்பவராகவும், ஒரே ஓவரில் அல்லது அடுத்தடுத்த ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுப்பவராகவும்,
தன்னை அடையாளப்படுத்திய இவர் பேட்டிங்கிலும் அவ்வப்போது லோயர் ஆர்டரில் அதிரடியாக ரன்களைக் குவித்து வெற்றிகளில் பங்காற்றினார்.
அதே நேரத்தில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்குவதாலும் பாண்டியா மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதாலும் வாய்ப்பை இழந்த இவர் டி20 உலகக்கோப்பையில் இடம் பெறாவிட்டாலும் 2023இல் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு விளையாடுவதே தம்முடைய லட்சியம் என்று கூறியுள்ளார்.
தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இவர் : “டி20 உலகக்கோப்பையில் விளையாடாதது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு.
ஒவ்வொரு வீரரும் உலக கோப்பையில் விளையாடி வெல்ல வேண்டும் என்பதேயே கனவாக வைத்திருப்பார்கள். இம்முறை நான் தேர்வாகவில்லை, இருந்தாலும் பரவாயில்லை.
ஆனால் எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது போலவே அடுத்த வருடம் ஒருநாள் உலக கோப்பை வர உள்ளது.
எனவே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி அந்த உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் கவனம் செலுத்துவேன்.
”சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அணிகள் சிறப்பாக செயல்படுவதற்கு அவர்களது பேட்டிங் வரிசை ஆழமாக இருப்பதே காரணமாகும்.
எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவில் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் போன்றவர்கள் 8, 9 ஆகிய இடங்களில் விளையாடுகிறார்கள். இங்கிலாந்திலும் அதே மாதிரிதான். அந்த வகையில் என்னுடைய பேட்டிங்கில் நான் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வருகிறேன்.
குறிப்பாக 7 – 9 வரையிலான இடத்தில் நீங்கள் அசத்தினால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்”அவர்களை போலவே நம்முடைய பேட்டிங் வரிசையையும் ஆழமாக மாற்றுவது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் அடிக்கும் 10 – 15 ரன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றும்” என்று கூறினார்.
பேட்டிங்கில் நல்ல திறமை கொண்டிருக்கும் இவர் பந்து வீச்சில் ரன்களை கொடுப்பது மட்டுமே பிரச்சனையாக உள்ளது. எனவே அதில் சற்று மெனக்கெட்டால் நிச்சயம் இவரால் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க முடியும்.
காபா, லண்டன் டெஸ்ட் போட்டிகளில் இவரது ’கவர் ட்ரைவ்’ ஜாம்பவான் ’ஸ்டீவ் வாக்’ போல் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்சி அண்மையில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெல்லி சிக்னலை உணர்ந்த மைத்ரேயன்: நீக்கிய எடப்பாடி
பத்திரிகையாளர் டு துணைப் பொதுச் செயலாளர்: கனிமொழியின் கரடு முரடு பயணம்!