சோயப் மாலிக் திருமணம் தொடர்பாக சானியா மிர்சா மற்றும் அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2010-ல் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் இஷான் என ஒரு மகன் இருக்கிறார்.
– Alhamdullilah ♥️
"And We created you in pairs" وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا pic.twitter.com/nPzKYYvTcV
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) January 20, 2024
இந்த நிலையில் சோயப் மாலிக் நேற்று (ஜனவரி 2௦) பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை(30) திருமணம் செய்திருப்பதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. சானியா-சோயப் இருவரும் விவாகரத்து செய்தார்களா? இல்லையா? என்னும் கேள்வி தான் இந்த விவாதங்களுக்கு காரணம்.
இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு நாடுகளிலும் இந்த திருமணம் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், முதன்முறையாக சானியா இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சானியா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சானியா மிர்சா எப்போதுமே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் பகிர்ந்து கொண்டது கிடையாது.
ஆனால் இன்று சானியாவும், சோயிப்பும் சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்றதை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போது சோயிப்பின் புதிய வாழ்க்கைக்கு சானியா தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்த கடினமான காலகட்டத்தில் ரசிகர்கள், ஊடகங்கள் சானியா மிர்சாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தலையிடாமல் அமைதி காக்க வேண்டும் என்றும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், ”விவாகரத்து கடினமானது” என்ற தலைப்பில் மெசேஜ் ஒன்றை சானியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”விவாகரத்து கடினமானது” கணவரை பிரிகிறாரா சானியா மிர்சா?
நடிகையை 3-வது திருமணம் செய்த சானியா மிர்சாவின் கணவர்… அப்போ அது உண்மை தானா?