இந்திய கிரிக்கெட் அணியில் அண்மைக்காலமாக கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருபவர் கே.எல்.ராகுல். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பி வருகிறார் என்றும் ஆனாலும், இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவது ஆச்சரியமாக உள்ளதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராகுல் டிராவிட், கே.எல்.ராகுல் அந்நிய மண்ணில் சிறப்பாக விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்ட துணை கேப்டன் பதவி நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கே எல் ராகுலை குறிவைத்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
கே.எல்.ராகுல் விவகாரத்தில் முன்னாள் வீரர்கள் யாரும் விமர்சிப்பதில்லை. அதற்கு காரணம் ஐபிஎல் அல்லது இந்திய அணியில் ஏதேனும் பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தால் இப்படி செய்கிறார்கள் என்று சாடியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிநாடுகளில் கே.எல். ராகுல் நன்கு விளையாடியதால் தான் தற்போது இந்திய அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 21) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
சேனா (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்களின் பட்டியல் இது.
ஒருவேளை இதனால் தான் கே.எல். ராகுலுக்கு இந்திய அணி ஆதரவு தருவதாக இருக்கலாம். இந்தக் காலக்கட்டத்தில் சொந்த மண்ணில் தற்போது 2 டெஸ்டுகள் விளையாடியுள்ளார் என்றும் மேலும்,
இந்த ட்வீட் குறித்து தன் மீது விமர்சனம் வரலாம் என்பதால் அடுத்து அவர் கூறியதாவது: ”இல்லை… இல்லை… எனக்கு பிசிசிஐயில் தேர்வுக்குழு உறுப்பினர், பயிற்சியாளர் பதவி வேண்டாம்.
மேலும் ஐபிஎல் போட்டியில் ஆலோசகர், பயிற்சியாளர் பதவிகளும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உக்ரைனில் அமெரிக்க அதிபர் பைடன்: ரஷ்யா அதிர்ச்சி!
ஸ்டாலின் 70: துரைமுருகன் புதிய அறிவிப்பு!