shoaib malik marries actress sana javed

நடிகையை 3-வது திருமணம் செய்த சானியா மிர்சாவின் கணவர்… அப்போ அது உண்மை தானா?

விளையாட்டு

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் நடிகையை திருமணம் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”விவாகரத்து கடினமானது” என தலைப்பிட்டு மெசேஜ் ஒன்றை வைத்திருந்தார்.

இதனால் சோயப் மாலிக்-சானியா மிர்சா இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்களா? என கேள்வி எழுந்தது. ஆனால் இருவருமே இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 2௦) பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை(30) திருமணம் செய்திருப்பதாக சோயப் மாலிக் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

அதில், ”அல்ஹம்துலில்லாஹ்.  நாம் உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்”, என இதயம் எமோஜியுடன் தன்னுடைய மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதனால் சானியா மிர்சா-சோயப் மாலிக் விவாகரத்து குறித்த செய்திகள் உண்மை தானா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

41 வயதாகும் சோயப் கடந்த 2002-ம் ஆண்டு ஆயிஷா சித்திக் என்பவரை திருமணம் செய்தார். 8 வருடங்களுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு, இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை கடந்த 2010-ல் மணந்தார்.

சோயப்-சானியா தம்பதியினருக்கு 5 வயதில் இஷான் என ஒரு மகன் இருக்கிறார். தற்போது சானியாவை விவாகரத்து எதுவும் செய்யாமலேயே 3-வதாக நடிகை சனா ஜாவத்தை இன்று மணந்துள்ளார்.

நடிகை சனா ஜாவத்திற்கு இது இரண்டாவது திருமணமாகும். முன்னதாக அவர் கடந்த 2020-ம் ஆண்டு பாடகர் உமைர் ஜஸ்வால் என்பவரை திருமணம் செய்து, பின்னர் அவரை பிரிந்து விட்டார்.

முன்னதாக கடந்த 2022 மார்ச் மாதம் சனா ஜாவத் சர்ச்சை ஒன்றில் சிக்கிய போது,”எனக்கு சில காலமாக சனா ஜாவத்தை தெரியும். அவருடன் பலமுறை சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் அவர் என்னிடமும் நம்மைச்சுற்றி உள்ளவர்களிடமும் எப்போதும் அன்பாகவும், மரியாதையுடனும் இருந்துள்ளார் என்பதைக் கூற முடியும்,” என  ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”விவாகரத்து கடினமானது” கணவரை பிரிகிறாரா சானியா மிர்சா?

தமிழில் கம்பராமாயண பாராயணம்: ரசித்து கேட்ட பிரதமர் மோடி

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *