முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் ஸ்டோரி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. sania mirza divorce is hard
”விவாகரத்து கடினமானது” என்ற தலைப்புடன் சானியா வைத்திருக்கும் அந்த போஸ்ட் அவர் தனது கணவர் சோயிப் மாலிக்கை பிரிய உள்ளாரா? என்ற பெரும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2௦1௦-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். சானியா – சோயிப் தம்பதியினருக்கு இசா மிர்சா மாலிக் என ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் சானியா மிர்சா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், ”திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது தான். இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள்.
உடல் பருமனாக இருப்பதும், உடலை சரியாக வைத்திருப்பதும் கடினமானது தான். இதில் உங்களுக்கான கடினமான ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
கடனில் இருப்பதும், நிதி விஷயத்தில் மிகச்சரியாக இருப்பதும் கடினமானது தான். இதில் கடினமானதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
தொடர்புடன் இருப்பதும், தொடர்பு இல்லாமல் இருப்பதும் கடினமானது தான். இதில் கடினமான ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
வாழ்க்கை என்பது எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமானதாக தான் இருக்கும். ஆனால் எந்த மாதிரியான கடினம் என்பதை நாம் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.
அவரின் இந்த போஸ்ட் தற்போது பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. ஏன் திடீரென அவர் இவ்வாறு ஸ்டோரி வைத்துள்ளார் என்பது, குறித்து பலரும் பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக ஜனவரி 8-ம் தேதி சானியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், ”உங்கள் இதயத்தின் அமைதியைக் குலைக்கும் ஒன்றை விட்டு விடுங்கள்,” என தெரிவித்து இருந்தார்.
இதேபோல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பயோவில் சோயிப் மாலிக், ” சானியா மிர்சா என்னும் சூப்பர் பெண்ணுக்கு கணவன்,” என வைத்திருந்ததை கடந்த 2௦23-ம் ஆண்டு மாற்றினார்.
அது முதலே சோயிப்-சானியா இருவரும் விவாகரத்து பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இருவரும் அதுகுறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் சானியா இப்படி ஒரு ஸ்டோரி வைத்திருப்பதால், விரைவில் இந்த செய்திகளுக்கு சோயிப் அல்லது சானியா முற்றுப்புள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்
அலங்காநல்லூர் செல்லும் ஸ்டாலின் : அமீர் வைத்த முக்கிய கோரிக்கை!
“ஏற்கனவே 2 டக் அவுட்”: வைரலாகும் ரோகித் சர்மா வீடியோ!
sania mirza divorce is hard