மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா கேப்டன் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றப்படும் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. CSK beat Mumbai Indians at Instagram
ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த நிலையில் தற்போது ஐபில் ஃபீவர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவ தொடங்கியுள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இதில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டது தான் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக்கின் வருகையால் மகிழ்ச்சியில் இருந்தனர் மும்பை ரசிகர்கள். ஆனால் அதில் நேற்று வெடிகுண்டு அறிவிப்பை வீசியது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.
இனி ஹர்திக் பாண்டியா தான் கேப்டன்!
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக மும்பை அணி நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு பதிலாக 2024 ஐபிஎல் தொடர் முதல் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவு உலகெங்கிலும் உள்ள பல மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மட்டுமின்றி கடும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
நேற்று இரவு முதல் சமூகவலைதளங்களில் #ShameOnMI என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
https://twitter.com/Estd_18/status/1735739871111811267
அதில் பலரும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
பெரிய குடும்பமான சிஎஸ்கே!
அதே வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் பயனடைந்துள்ளது.
ரோகித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது முதல் அந்த அணியின் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சீராக குறைந்து வருகிறது.
நேற்றைய அறிவிப்புக்கு முன்னதாக 13.2 மில்லியன் பாலோயர்ஸ்களுடன் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் நேற்று இரவு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகர்கள் அன்பாலோ செய்து வரும் நிலையில் தற்போது 12 மில்லியனாக (1,29,92,147) குறைந்துள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ்களை இழந்துள்ளது எம்.ஐ.
அதே நேரத்தில் 13.08 மில்லியன்(13,083,803) பாலோயர்ஸ்களுடன் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் ஐபிஎல் அணியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாறியுள்ளது.
ஏற்கெனவே ரோகித்தின் கேப்டன் பதவி பறிப்பால் வேதனையில் இருக்கும் மும்பை அணி ரசிகர்களுக்கு தற்போது வந்துள்ள இந்த தகவல் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் வரும் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஓ.எம்.ஆர். சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அமல்!
வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி!
CSK beat Mumbai Indians at Instagram