3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. இதில், முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. India beat south Africa by 78 runs
இதை தொடர்ந்து, 2வது போட்டியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா அதே 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது.
இந்நிலையில், பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ருதுராஜ் கெய்க்வாத்திற்கு பதிலாக ரஜத் படிதாரும், சாய் சுதர்சனும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இவர்கள் அதிரடியாக ஆட்டத்தை துவங்கினாலும், ஏமாற்றம் அளிக்கும் விதமாக படிதார் 22 ரன்களுக்கும், அடுத்தடுத்து அரை சதங்களை விளாசிய சுதர்சன் 10 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.
பின், சிறிது மாற்றத்துடன் 3வது வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். துவக்கத்தில் இருந்தே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சீரான வேகத்தில் ரன்களை குவித்த இவர், 6 பவுண்டரி, 3 சிக்ஸ்களுடன் 108 ரன்கள் குவித்த இவர், ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார்.
இவருக்கு, உறுதுணையாக கேப்டன் கே.எல் ராகுல் 21 ரன்கள், அதன் பின் வந்த திலக் வர்மா அரைசதம் கடந்து 52 ரன்கள், இவரை தொடர்ந்து ரிங்கு சிங் தனது அதிரடியால் 37 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 296 ரன்கள் சேர்த்தது.
297 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஸி ஒருபுறத்தில் சிறப்பான துவக்கம் அளித்தாலும், மறுபுறத்தில் ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் ராஸி வென் டர் டுஷன் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
பின் வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 36 ரன்களுக்கும், சிறப்பாக விளையாடி வந்த டோனி டி ஜோர்ஸி 81 ரன்களுக்கும், தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கையாக இருந்த ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோரும் 21 ரன்கள் மற்றும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதை தொடர்ந்து, 218 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன்மூலம், 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் சதம் விளாசி, இந்திய வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த சஞ்சு சாம்சன் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
கடைசி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 10 விக்கெட்களை கைப்பற்றிய அர்ஷ்தீப் சிங் ‘தொடர் நாயகன்’ விருதை வென்றார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான லாரன்ஸ், சூரி படங்கள்!
India beat south Africa by 78 runs