சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் இன்று (டிசம்பர் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெரும் ஐடி நிறுவனங்கள் இயங்கி வரும் சென்னை ராஜீவ் காந்தி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அங்கு மெட்ரோ பணிகளும் நடந்து வரும் நிலையில் போக்குவரத்து மேற்கொள்வது கடினமாகி வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் வாகனங்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.
காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் பதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
இதேபோல், கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்படும். பின்னர், பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய “U” திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
இது சோதனை அடிப்படையில் செயல்படுத்தபட உள்ள திட்டம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நானி?
வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி!