ஐசிசி 2023 அணியில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

விளையாட்டு

2023ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய சர்வதேச வீரர்களை அடிப்படையாக கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான 11 வீரர்கள் கொண்ட அணிகளை ஐசிசி இன்று (ஜனவரி 23) வெளியிட்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் அணி பட்டியல்:

ஐசிசி 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை பொறுத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி என 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.

Men's-ODI-Team-of-the-Year(16x9)

 

அணியின் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், டேரில் மிட்செல்,  தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன், மார்கோ ஜான்சன் ஆகியோர் ஐசிசி ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி டி20 அணி பட்டியல்:

ஐசிசி 2023ஆம் ஆண்டுக்கான டி20 அணியிலும் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அதன்படி அணியில் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங் என இந்திய வீரர்கள் 4 பேர் இடம்பிடித்துள்ளனர்.

Men's-T20I-Team-of-the-Year(16x9)

அணியின் கேப்டனாக இந்திய அணியை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்காக வழிநடத்தி சென்று தொடரை கைப்பற்றிய சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும், இங்கிலாந்தின் பில் சால்ட், வெஸ்ட் இண்டீஸின் நிகோலஸ் பூரண், நியூசிலாந்தின் மார்க் சப்மன், ஜிம்பாவேயின் சிக்கந்தர் ராஸா,ரிச்சர்ட் ஞாரவா, உகாண்டாவின் அல்பேஸ் ராம்ஜனி, அயர்லாந்தின் மார்க் அடாயிர் ஆகியோர் ஐசிசி ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் அணி பட்டியல்: 

ஐசிசி 2023ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியை பொறுத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

அந்த அணியைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் என 5 பேர் இடம்பிடித்துள்ளனர்

Men's-Test-Team-of-the-Year(16x9)

டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் தொடர், ஒருநாள் உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணியில் இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஆல்ரவுண்டர்களான  ரவீந்திர ஜடேஜா, மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

மேலும் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட், நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் மற்றும் இலங்கையின் திமுத் கருணாரத்னே ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ராமர், அனுமான், இராமாயணம் : தற்கால சினிமாவின் கச்சாப்பொருளா?

ரேஷன் கடைகளுக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

தைப்பூசம், குடியரசு தினத்தையொட்டி தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0