mumbai indians ipl 2024

IPL 2024: இதுக்கு பருத்திமூட்டை ‘குடோன்லேயே’ இருந்துருக்கலாம்… கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அந்த அணியை பங்கமாக சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். mumbai indians ipl 2024

இன்னும் 3 தினங்களில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடர் சீரும், சிறப்புமாக தொடங்குகிறது. கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் விழாவின் தொடக்கநாளில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

mumbai indians ipl 2024

நடப்பு சாம்பியன் சென்னை அணியை தோனியும், பெங்களூர் அணியை பாப் டூ பிளசிஸும் வழிநடத்துகின்றனர். இதனால் முதல் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

CSK: விழுந்தது அடுத்த அடி… ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட வீரர்!

ஐபிஎல் தொடரை முன்னிட்டு அனைத்து அணியை சேர்ந்த வீரர்களும் ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தொடர் சர்ச்சைகளில் சிக்கிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களும், தற்போது பயிற்சியில் இணைந்துள்ளனர்.

அதுதொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவே புதிய சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. வீடியோவில் ஒரு சோபாவும் அதனை சுற்றி நான்கு நாற்காலிகளும்  போடப்பட்டு இருக்கிறது.

WPL 2024: அடித்து நொறுக்கப்பட்ட 5 சாதனைகள்… யாரெல்லாம் சம்பவம் செஞ்சு இருக்காங்கன்னு பாருங்க!

அந்த பெரிய சோபாவின் ஒருமுனையில் ரோஹித் அமர்ந்திருக்க, மறுமுனையில் ஹர்திக் அமர்ந்துள்ளார். சுற்றி இருக்கும் நாற்காலிகளில் பியுஷ் சாவ்லா உள்ளிட்ட வீரர்கள் அமர்ந்துள்ளனர். சோபாவிற்கு பின்னால் பும்ரா நின்று கொண்டிருக்கிறார்.

ஒருபுறம் ஹர்திக், ரோஹித் நடுவிலான தூரத்தை வைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மறுபுறம் பும்ராவை நிற்க வைத்ததற்கும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

எது எப்படியோ மொத்தத்தில் ‘ஒன் பேமிலி’ என பெருமையுடன் அழைக்கப்பட்ட மும்பை அணி இனி அப்படி இருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

ரசிகர்களும் ஒற்றுமை இல்லாத இப்படி ஒரு அணியை வைத்துக்கொண்டு மும்பை அணி எப்படி வெல்லப்போகிறது? என கேள்விகள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழிசை ராஜினாமா ஏற்பு: தெலங்கானா புதுச்சேரிக்கு புதிய ஆளுநர் யார்?

GOLD RATE: உச்சம் தொட்ட தங்கம்… கதி கலங்கும் வாடிக்கையாளர்கள்!

அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *