சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 19) ரூபாய் 360 அதிகரித்து ரூபாய் 49,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 45 அதிகரித்து ரூபாய் 6,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 392 அதிகரித்து ரூபாய் 53,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 49 அதிகரித்து ரூபாய் 6,693-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள்!
வெள்ளியைப் பொறுத்தவரையில் 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8௦.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 8௦,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சிலநாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரேயடியாக உச்சம் தொட்டுள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்குமா? இல்லை சற்றேனும் குறையுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!