சென்னை அணியில் 3-வது வீரரும் காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் பங்குபெற முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் இன்னும் நான்கு தினங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை பெங்களூர் அணி எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடக்கவிழாவும் நடைபெறுவதால் போட்டிக்கான டிக்கெட்டினை பெற்றிட ரசிகர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்குபெறவுள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக, சென்னை அணியின் முக்கிய வீரர் ஒருவர் காயமடைந்ததுள்ளார்.
GOLD RATE: ‘ஸ்வீட் ஷாக்’ கொடுத்த தங்கம் விலை
வங்காள தேசத்தினை சேர்ந்த முஸ்தாபிசுர் ரஹ்மான் மினி ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்காக எடுக்கப்பட்டார்.
இதனால் சென்னை மட்டுமின்றி வங்கதேச ரசிகர்களும் ஐபிஎல் தொடரில் அவரின் பந்துவீச்சினை எதிர்நோக்கி தீவிரமாக காத்திருந்தனர்.
இதற்கிடையில் இலங்கை – வங்காள தேசம் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 18) நடைபெற்றது. இதில் 48-வது ஓவரை வீசிய ரஹ்மான் கடும் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து நடக்க முடியாமல் அவதிப்பட்ட ரஹ்மானை ஸ்ட்ரெச்சரில் வைத்து சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். 9 ஓவர்கள் வீசிய ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 39 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார்.
WPL 2024: எல்லிஸ் பெர்ரி டூ ஸ்ரேயங்கா பாட்டீல்… யாருக்கு எந்த விருது? எவ்வளவு பரிசுத்தொகை?
போட்டி முடிவடையப்போகும் தருவாயில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சகவீரர் சௌம்யா சர்க்கார் அந்த ஓவரை வீசினார்.
முன்னதாக 42-வது ஓவரை வீசியபோதே வயிற்றினை பிடித்துக்கொண்டு, ரஹ்மான் தரையில் மடங்கி அமர்ந்து விட்டார்.
🚨 Mustafizur Rahman injured he walk out without completing 48th over#WhistlePodu #IPL #CSK @MSDhoni pic.twitter.com/Cy55NXRcng
— MSDian™ (@ItzThanesh) March 18, 2024
மீண்டும் 48-வது ஓவரினை அளித்தபோது அவரால் முதல் பந்தினை கூட வீச முடியவில்லை. தற்போது ரஹ்மானின் நிலைகுறித்து தெளிவாக தெரியவில்லை.
ஒருவேளை அவருக்கு ஓய்வு தேவைப்பட்டால் சென்னை அணிக்கு அது பலத்த அடியாக அமையும்.
ஏனெனில் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே, இலங்கை வீரர் பதிரனா ஆகியோர் உடற்தகுதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது முஸ்தாபிசுர் ரஹ்மானும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
இதனால் மாற்று வீரரை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது சென்னை அணி இருக்கிறது. ரஹ்மானுக்கு மாற்றாக ஹேசல்வுட்டினை சென்னை அணி எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும் போட்டிக்கு இன்னும் குறைவான தினங்களே உள்ளதால் தோனி என்ன செய்யப்போகிறார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Kanguva டீசர் ரெடி… Sizzle இதற்கான அர்த்தம் என்ன?
எஸ்.பி.ஐ வங்கியின் நடவடிக்கையில் அதிருப்தி… உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!