நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்…
மாஸ்டர் கிட்ட ஒரு டீ, ஒரு காபி ஆர்டர் பண்ணோம்…
அப்போம் நண்பர், “மூங்கில் இல்லைன்னா புல்லாங்குழல் இசைக்க முடியாது. அதேமாதிரி இந்தியாவுல வேலைவாய்ப்பு இல்லன்னா இட ஒதுக்கீடு இருக்காதுன்னு ராகுல் காந்தி பேசிருக்காருன்னு” சொன்னாப்ல…
அதுக்கு நான், “இவரு ஏன் இந்த மாதிரிலாம் ஒப்பீடு பண்றாரு…ஆல்ரெடி இங்க இசை பெரிசா? மொழி பெரிசான்னு ஒரு கலவரம் போய்க்கிட்டு இருக்குன்னு” சொன்னேன்…
அதுக்கு , “ஒருவேளை ராகுலுக்கும் இந்த பிரச்சனை தெரிஞ்சுருக்குமோ என்னவோ யாரு கண்டான்னு” நண்பர் சொன்னாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
குருநாதா
குருப்பெயர்ச்சி அப்டேட் தேடுற உங்க உலகம் வேற…
விடாமுயற்சி அப்டேட் தேடுற எங்க
உலகம் வேற..
ℳsd இதயவன்
ராகுல் காந்தியின் விதி பொய் சொல்வது மட்டுமே – அமித்ஷா
உங்க விதி சொன்ன பொய்யயே திரும்ப திரும்ப சொல்வதா?!
ரஹீம் கஸ்ஸாலி
பாலைவனம்ன்னு சொல்லப்பட நாடெல்லாம் அதிக மழைப்பொழிவு நாடா மாறிட்டு வருது. ஆனால், மாதம் மும்மாரி பொழிந்த நாடோ பாலைவனமா மாறிட்டு வருது. அடே… க்ளோபல் வார்மிங்..
கடைநிலை ஊழியன்
கோடை வெயிலை சமாளிப்பது எப்படி.. ?
செப்டம்பர் மாதம் வரும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும்..
குருநாதா
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்
மொத வேலையா மாமனார் குடுத்த பைக்ல இருந்து பொண்டாட்டி பேர எடுக்கனும்
black cat
டுவிட்டர் காதல்
யாரோ நீ … யாரோ நான்…
X வழியே சந்தித்தோம்.. Chatting ல் மனம் கவர்ந்தோம்..
Dp இல் முகம் மலர்ந்தோம்.. Msg இல் காதல் சொன்னோம்..
Online இல் உயிர் வாழ்ந்தோம்… Offline இல் உயிர் பிரிந்தோம்..
இன்று என்னிடத்தில் நீ.. உன் block list ல் நான்…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பாத்ரூம் பாடகர்கள் பலரும் ‘குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா..?’ எனும் பாடல் கேரக்டராக வாழ்பவர்களே..
கோழியின் கிறுக்கல்!!
மழை அடிச்சா கூட சாலை இவ்வளவு சுத்தமா இருக்குமான்னு தெரியலை,
ஆனா அடிக்கிற வெயிலுக்கு சுத்தமா இருக்கு!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?
அமேதி, ரேபரேலியில் ராகுல் பிரியங்கா போட்டியா? ஜெய்ராம் ரமேஷ் பதில்!