ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம் : பிசிசிஐ

விளையாட்டு

ரிஷப் பண்ட் சிகிச்சைக்காக டேராடூனிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான 25 வயதான இளம் வீரர் ரிஷப் பண்ட் இவர் கடந்த டிசம்பர் 30ம்தேதி அதிகாலையில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து காரில் சென்றார்.

ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மாத்பூர் ஜால் அருகே உள்ள மங்லெளர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் தீப்பிடித்து முற்றிலும் உருகுலைந்த நிலையில் ரிஷப் பண்ட் நெற்றி, வலது முழங்கால், கணுக்கால் மற்றும் முதுகில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனை நேரில் கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு ரூர்க்கியில் உள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு ரிஷப் பண்ட்டுக்கு நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ”ரிஷப் பண்ட் உயர் சிகிச்சைக்காக கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்படுவார். மேலும் அவர் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் தோள்பட்டை சேவையின் இயக்குநர் டாக்டர் டின்ஷா பர்திவாலாவின் நேரடி மேற்பார்வையில் இருப்பார்.

ரிஷாப் அறுவைசிகிச்சை மற்றும் தசைநார் சிகிச்சைக்கான அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார், மேலும் அவரது சிகிச்சை மற்றும் உடல்நலம் முழுவதும் பிசிசிஐ மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

ரிஷப் பண்ட் மீண்டு வருவதற்கு உதவ எல்லா முயற்சிகளையும் பிசிசிஐ எடுக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் அவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் பிசிசிஐ வழங்கும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

”நான் குற்றவாளியாகி விடுவேன் என பயம்”: உயிரிழந்த பெண்ணின் தோழி!

நீ என்ன பெரிய ஆளா? டிவி சேனல்னா பயப்படனுமா? – செய்தியாளரை மிரட்டிய அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *