என் கிரிக்கெட் வாழ்க்கையில்…அஸ்வின் குற்றச்சாட்டு!

விளையாட்டு

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை விட என் குடும்பத்தினர் தான் அதிகம் கஷ்டப்படுகின்றனர் என்று இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது தான் காரணம் என்றும் அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன் என்ற கேள்வியையும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் , ரசிகர்களும் எழுப்பினர்.

இதன்பின்னர் அஸ்வின் தற்போது பல்வேறு விவரங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அஸ்வின் அளித்த பேட்டியில், “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை விட என் குடும்பத்தினர் தான் அதிக கஷ்டப்படுகின்றனர் ” என்று கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி பின்வருமாறு, “நிறைய பேர் என்னை நான் அதிகம் யோசிப்பவன் என்று நிலைநிறுத்திவிட்டனர்.

ஒரு வீரர் தொடர்ந்து 15, 20 போட்டிகளில் விளையாடப் போகிறார் என்று தெரிந்தால் அவர் அதிகம் யோசிக்க மாட்டார் ஆனால் உங்களுக்கு கிடைக்கப் போவது ஒன்று இரண்டு ஆட்டம் தான் என்பது தெரிந்தால், நீங்கள் அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதிகம் யோசிக்க தொடங்கி விடுவீர்கள்.
இதுதான் என்னுடைய வேலை.

என்னுடைய பணியும் அதுதான். நான் இப்படி யோசிப்பது தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

இதுவே யாராவது என்னிடம் நீ தொடர்ந்து பதினைந்து போட்டிகளில் விளையாடப் போகிறாய். அதன்பிறகு உன்னை அணியே பார்த்துக் கொள்ளும். உனக்கு இந்த பொறுப்பு எல்லாம் வழங்கப்படும்.

அடுத்த தலைமை பொறுப்புக்கு நீ வரப் போகிறாய் என்று கூறினால் நான் ஏன் தேவையில்லாததை பற்றி யோசிக்க போகிறேன்.

இதனால் ஒருவரை இவர் அதிகம் சிந்திப்பவர் என்று சொல்வது சரியானது கிடையாது. ஏனென்றால் அந்த நபர் எத்தகைய பயணத்தில் இருக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். என்னைப் பற்றி அப்படி சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

என்னுடைய பெயர் அணியில் இருக்கிறதா? இல்லையா? என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.

ஆனால் அந்த இடத்தை என்னால் கடும் முயற்சி மூலம் சம்பாதிக்க முடியும். எனினும் இந்த விஷயத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள்.

என் தந்தைக்கு இதயப்பிரச்சனை மற்றும் பல பிரச்சனைகள் உள்ளது. ஒவ்வொருமுறை நான் விளையாடும் போதும் என் தந்தை என்னை தொலைபேசியில் அழைப்பார். என் தந்தை மன அழுத்தத்தில் இருக்கிறார். நான் வெளியே சென்று விளையாடுவது மிகவும் எளிதானது. அது என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது ஆனால் என் தந்தை அப்படி இல்லை” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’அமமுக இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது’: டிடிவி தினகரன்

ஆதிபுருஷ் திரைப்படமும்… கண்டனங்களும்!

Ashwins accusation in my cricket career
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *