கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் சிங் லவ்லி, டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரவிந்த் சிங், தனது பதவியை இன்று (ஏப்ரல் 28) ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சி மீது தவறான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கட்சியில் உள்ள பாதி அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நான் டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து டெல்லி மேலிட பொறுப்பாளர் எந்த புதிய நிர்வாகிகளையும் நியமிக்க விடவில்லை.
நான் பரிந்துரை செய்த தலைவர்கள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டனர். தொகுதி தலைவர்களை கூட என்னை நியமிக்க விடவில்லை. இதனால் டெல்லியில் 150-க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்கள் இல்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மாநில தலைவர் பதிவியிலிருந்து அரவிந்த் சிங் ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியிடம் ஜெயக்குமார் புகார்- அதிமுகவில் என்ன நடக்கிறது?
குஜராத், ராஜஸ்தானில் ரூ.300 கோடி போதைப்பொருள் பறிமுதல்!