sதடை அதை உடை: சென்சார் போர்டின் பின்வாங்கல்!

public

நடிகை ரவீனா தண்டன் வழக்கமான மசாலா கிளாமர் நடிகையாக தனது திரைவாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் கடந்த இரு வருடங்களில் பல படங்களில் நடித்திருக்கலாம். ஆனால், பெயர் சொல்லும்படி ஒரு திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக Maatr திரைப்படத்துக்காக கடந்த 2 ஆண்டுகளை செலவிட்டிருக்கிறார். அந்த இரண்டு ஆண்டுகள் உழைப்புக்கு அவருக்குக் கிடைத்த பரிசு எது தெரியுமா? Maatr படத்துக்குத் தடை.

Maatr திரைப்படத்தின் கதை மிகவும் பழகிப்போனது இந்தியாவுக்கு. தினமும் நடைபெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் பேசும் திரைப்படம். ஆனால், பேசியிருக்கும் வழி தான் வேறு.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதி கிடைக்காதபோது, காவல்துறை பாதுகாக்கத் தவறும்போது, குற்றவாளி தப்பிக்கும் அளவுக்கு சட்டம் தன்னகத்தில் ஓட்டைகளை வைத்திருக்கும்போது, அரசாங்கம் மனதைத் திறக்காமல் பேங்க் அக்கவுண்டை திறக்கும்போது சமூகத்தின்முன் தனிமையில் விடப்படும் பெண் என்ன செய்வாள்? தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதங்களைக் கையில் எடுக்கிறாள். தன்னை சீரழிக்கவரும் மிருகங்களை வேட்டையாடுகிறாள் இது தான் Maatr படத்தின் சாராம்சம். ஆனால், பாலியல் வன்கொடுமை காட்சிகள் அப்பட்டமாக இருப்பதாலும், கொடூரமான கொலைகள் நிகழ்த்தப்படுவதாலும் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கமுடியாது என்று கூறி சென்சார் வேலைகளை தள்ளிவைத்திருக்கிறது சென்சார் போர்டு. படத்தைப்பார்த்த அதிகாரிகள் பாதியிலேயே எழுந்துசென்றதன் பின்பு இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

Maatr படத்துக்கு தடை விதித்திருப்பதாக வெளியான தகவல்களால் திரைத்துறையினர் சென்சார் போர்டை விமர்சிக்கத் தொடங்கினார்கள். சென்சார் போர்டின் மீது உருவான எதிர்ப்புக்குரல்கள் ஒன்று சேர்ந்த நிலையில், **நாங்கள் Maatr படத்தை தடை செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லவே இல்லை. சென்சாருக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டொரு நாட்களில் முடிவு தெரிந்துவிடும்** என சென்சார் போர்டின் CEO அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியிருக்கிறார்.

ரவீனா தண்டன் தரப்பில் **படத்தை முழுவதும் பார்க்காமல் இவர்கள் எந்தமாதிரியான சர்டிஃபிகேட்டைக் கொடுப்பார்கள். படத்தின் ரிலீஸை தடைசெய்ய காரணம் தேடுவதற்காகத்தான் இந்த அவகாசத்தைக் கேட்டிருக்கிறார்கள்.** என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *