Rவாரணாசி மக்களுக்கு மோடி நன்றி!

public

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க, வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் 350 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக மே 30ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இதற்காகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். 2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அவருக்கு 1 லட்சம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக வாரணாசி சென்றுள்ளார்.

தனிவிமானம் மூலம் வாரணாசி வந்த அவரை, உபி ஆளுநர் ராம் நாய்க், முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காசி விஸ்நாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டுள்ளார். மோடியின் சிறப்பு வழிபாடுகளைக் காண்பதற்காக எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா அசோக் திவேதி கூறுகையில், “2014 ஆம் ஆண்டைப் போலவே பிரதமர் மோடி மக்களவை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இந்த கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்கிறார். காசி விஸ்வநாதரின் மிகப் பெரிய பக்தர் பிரதமர்தான்” என்று தெரிவித்துள்ளார்.

பூஜையை தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா மையத்துக்கு செல்லும் மோடி அங்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசவுள்ளார். பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மோடியின் வருகையை ஒட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுக்கு முன்பாக மோடி கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *