மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 மே 2019

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவாகியிருக்கிறது. ஆனபோதும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் ஒன்பது அதிமுகவுக்குப் போனதில் ஸ்டாலினுக்குப் பெரிய வருத்தம்.

மத்தியில் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிறுத்தாமல் போனதால் தமிழகத்தில் திமுக கூட்டணி பெரிதாக ஜெயித்தும் பெரிய அளவு பயனில்லாமல் போய்விட்டது. அதேநேரம் மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவினர் இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் அதிமுகவுக்கு ஒன்பது தொகுதிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்று கருதுகிறார் ஸ்டாலின்.

தேர்தல் பிரச்சாரத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் இடைத்தேர்தல் முடிந்ததும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசினார் ஸ்டாலின். ஆனால், இடைத்தேர்தலில் வாய்ப்பை திமுக நழுவ விட்டதால் மக்களவை வெற்றி கொண்டாட்ட மனநிலையிலும்... இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்த வருத்தத்தையும் கோபத்தையும் தன்னை காண வரும் நிர்வாகிகளிடம் வெளிப்படையாகவே கட்டிவருகிறார் ஸ்டாலின்.. வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களின் மாவட்டம் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.

அதேநேரம் திமுக வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஸ்டாலினைச் சந்திக்க அறிவாலயம் வந்திருக்கிறார்கள். அவர்களில் பலரை நேரில் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டச் செயலாளராக கேகேஎஸ்எஸ்ஆர் போன்ற கொண்ட சிலர் ஸ்டாலினைத் தயங்கியபடியே பார்த்துள்ளனர்.

அப்போது ஸ்டாலின் கேகேஎஸ்எஸ்ஆரைப் பார்த்து, ‘இனிமே என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க’ என சற்று கோபமாகவே சொல்லிவிட்டார்.

வெற்றி வாய்ப்பை இழந்த இந்த ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவே வென்றிருந்தால் இந்நேரம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும். திமுக நிர்வாகிகளின் கவனக்குறைவால்தான் இது தடுக்கப்பட்டது என்று கருதுகிறார் ஸ்டாலின். இதனால் சட்டமன்ற தேர்தலில் தோல்விக்குக் காரணமான நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க யோசித்து வருகிறார்.

மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் கோட்டைவிட்ட இந்த திமுக நிர்வாகிகளுக்கு எதிர்காலத்தில் திமுக ஆட்சி அமைத்தால் கூட அமைச்சர் பதவியோ முக்கிய பொறுப்புகளோ வழங்கப்படாது என்பதுதான் ஸ்டாலின் விடுத்திருக்கும் எச்சரிக்கை.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

ஞாயிறு 26 மே 2019