மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள் என்பதற்கான மிக நீண்ட விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து வெற்றிபெற்றுள்ள ஒரே நபர் தேனி தொகுதியின் ரவீந்திரநாத் குமார்தான் என்பதால் அவரை எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்திவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகிறார் அவரது தந்தையும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம். குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன் வகித்துவந்த கப்பல் போக்குவரத்துத் துறையை கேட்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமராக மோடியை தேர்ந்தெடுக்க டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சார்பாக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ரவீந்திரநாத் குமார் மூவரும் கலந்துகொண்டனர். அதன்பிறகு கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடம் உறுதியாகிவிட்டதாக கூறி தொகுதி முழுக்க குஷியாக வலம் வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதுபற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வென்ற ஒரே நபர் என்பதாலும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலும் மத்திய ரயில்வே இணையமைச்சர் பதவி ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக ரவீந்திரநாத்தின் படிப்பு, தொழில் உள்ளிட்ட பயோ-டேட்டாவை அவரது குடும்பத்தினரிடமிருந்து பாஜக தரப்பு கேட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் ரவீந்திரநாத் குடும்பத்தினர்” என்கிறார்கள்.

இதுதொடர்பாக பாஜக தரப்பில் விசாரித்தபோது, இதுவரை யாருக்கும் எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்து ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க வைத்திலிங்கம் உள்ளிட்ட சீனியர்கள் பலர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும்போது முதல்முறையாக எம்.பி.யாகியுள்ள அனுபவம் குறைந்த ரவீந்திரநாத்துக்கு எப்படி அமைச்சர் பதவியை கொடுப்பது என்ற பேச்சும் அதிமுகவுக்குள் எழுந்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

.

திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!

.

.

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

.

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

அடுத்ததுchevronRight icon