Oசிறைத் தண்டனை மனதை மாற்றியதா?

public

மது அருந்தி வாகனம் ஓட்டிய தொடர்பான வழக்கில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மனித குண்டுகளுக்கு சமமானவர்கள் என டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரவி ஷங்கர் என்பவர் கடந்த 13/3/2017 அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டியபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார் . இதையடுத்து அவர் டெல்லி நகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு ஐந்துநாள் சிறை தண்டனை,2 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை ஆறுமாத காலத்துக்கு ரத்து செய்யுமாறு டெல்லி போக்குவரத்து துறைக்கு உத்தரவிடபட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரவி ஷங்கர் டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சிறைத் தண்டனைக்கு பிறகு மனம் திருந்தியவர்கள் யாரும் இல்லை. எனவே, எனது சிறை தண்டனைக்குப் பதிலாக அபராதம் விதிக்குமாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி கிரிஷ் கத்பாலியா, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மனித குண்டுகளுக்கு சமம். இவர்களால் பாதசாரிகளுக்கு ஏற்படும் விபரீதங்களைச் சிந்திக்க வேண்டும். மேலும், சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதித்தால், இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அபராதம் செலுத்தி தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் என்ற தவறான எண்ணம் வந்துவிடும். சிறைத் தண்டனைக்கு பிறகு மனம் திருந்தியவர்கள் யாரும் இல்லை என்ற மனுதாரரின் வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *