eவருண் தவானுடன் இணையும் அனுஷ்கா ஷர்மா!

public

பாலிவுட் திரையுலகில் 2008ஆம் ஆண்டு யாஷ் ராஜ் புரொடக்‌ஷன் கம்பெனியின் மூலமாக Rab Ne Bana Di Jodi படத்தில் அறிமுகமான அனுஷ்கா ஷர்மா, நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இந்த ஒன்பது வருடங்களில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். தற்போது மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திய யாஷ் ராஜ் புரொடக்‌ஷன் கம்பெனியில் ஷாரட் கட்டாரியா இயக்கும் Sui Dhaaga என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக அனுஷ்கா ஷர்மா, நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான மனீஷ் ஷர்மா Shuddh Desi Romance, Ladies vs Ricky Bahl ஆகிய படங்களை இயக்கியவராவார். மேலும், அனுஷ்கார் ஷர்மா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான Band Baaja Baarat என்ற படத்தையும் மனீஷ் ஷர்மா இயக்கினார். வரும் ஜனவரி (2018) மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது அனுஷ்கா, ஷாருக் கானோடு இணைந்து நடித்த Jab Harry Met Sejal படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *