2பள்ளிகளில் யோகாவா?

public

அனைத்து பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்பது மதச் சார்பின்மைக்கு விரோதமானது என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று(செப்டம்பர் 21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் கட்டாயமாகத் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

‘யோகா’ என்பது வெறும் உடற்பயிற்சியாக மட்டும் அல்லாமல், அதில் இந்து மத சம்பிரதாயங்கள், சடங்குகள், ‘ஓம்’ உள்பட இடம்பெறும் நிலையில், ஒரு மதச்சார்பற்ற அரசின் சார்பில் ‘யோகா’வைக் கட்டாயமாக்குவது சரியானதல்ல. பல்வேறு மத நம்பிக்கை உள்ளவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங் களில், குறிப்பிட்ட இந்து மத சடங்காச்சாரங்களைத் திணிப்பது சட்டப்படியும் குற்றமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மதச் சார்பின்மைக்கு விரோதமான தமிழ்நாடு அரசின் இந்த முடிவு கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *