}கிச்சன் கீர்த்தனா: கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்

public

சமைத்து சாப்பிடுவதற்காக மட்டுமல்ல; சமைக்காமலேயே சாப்பிடவும் ஏற்றது குடமிளகாய். காலை நேரத்தில் இந்த கலர்ஃபுல் குடமிளகாய் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.

**என்ன தேவை?**

சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் – தலா பாதி அளவு

லெட்டூஸ் இலை – சிறிதளவு (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

தக்காளி – ஒன்று

ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்

வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.

**[நேற்றைய ரெசிப்பி: உருளைக்கிழங்கு – குடமிளகாய் கிரேவி](https://www.minnambalam.com/public/2021/02/18/1/potato-chilli-gravy)**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *