]மித்தாலி ராஜ்: தொடரும் ஆடை சர்ச்சை!

public

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படம் டிவிட்டரில் சர்ச்சைக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள படமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

ஆங்கிலப் பத்திரிகையான `வோக்’, தனது இந்தியப் பதிப்பின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக சில பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளது. இந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதிற்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், வில் வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

அந்தப் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் மித்தாலி ராஜ், ஷாருக் கான், நீட்டா அம்பானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அட்டைப் பக்கத்திற்கு கருப்பு உடையணிந்து பாலிவுட் நடிகையைப் போன்று மிதாலி ராஜ் போஸ் கொடுத்துள்ளது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ட்விட்டர். பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை விமர்சித்துப் பதிவிட்டுவருகின்றனர்

உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவரான மித்தாலி ராஜ் இந்திய அணிக்காக இதுவரை 186 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6190 ரன்கள் அடித்துள்ளார். மேலும் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *