[சல்மானுடன் நடிக்கும் ஷாருக் கான்!

public

பாலிவுட் திரையுலகில் சல்மான் – ஷாருக் கான்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வந்தது. அடிதடி வரையிலும் இந்த சம்பவம் சென்றதால், இரு நடிகர்களும் சைக்கிளில் ஒன்றாக சுற்றுவது, கட்டிப்பித்து ஃபோட்டோ எடுப்பது என தங்களது நடவடிக்கைகளை மாற்றினார்கள். அப்படியும் இந்த சச்சரவுகள் ஓயாததால் இருவரும் இணைந்து நடிக்க முடிவெடுத்தார்கள். சல்மான் கான் நடித்துவரும் ‘டியூப்லைட்’ திரைப்படத்தில், முக்கியக் கேரக்டரில் ஷாருக் கான் நடித்திருக்கிறார். கதையில் திருப்புமுனையாக அமையும் ஒரு மந்திரக்காரன் கேரக்டரில் ஷாருக் நடித்திருக்கிறார். கடந்த வருடத்தின் இறுதியில் வெளியான ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராயின் முன்னாள் கணவராக நடித்திருப்பார். அந்த கேரக்டர் தான் திரைப்படத்தை மாற்றும் கேரக்டராக அமையும். அதேமாதிரியான ஒரு கேரக்டர் தான் சல்மான் கானின் டியூப்லைட் திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *