முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் காவல்துறையில் இன்று (மே 21) புகாரளித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி உறுதி செய்தது.
இதனையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், வழக்குத் தொடர்பாக சரணடைவதில் விலக்கு அளிக்கவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தை நாடி இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக இடைக்கால தடை வாங்கினார்.
இதனிடையே, ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி பீலா ஐஏஎஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், தனது பெயரை பீலா வெங்கடேசன் எனவும் மாற்றினார்.
இந்நிலையில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புதிதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் பகுதி தையூரில் பீலா ஐஏஎஸ் தங்கியுள்ள வீட்டிற்குள் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டி ராஜேஷ் தாஸ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுத்தொடர்பாக, கேளம்பாக்கம் காவல்நிலையத்தில், பீலா ஐஏஎஸ் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘லாலேட்டன்’ – என்றும் இனிக்கும் இளமைத் துள்ளலின் அடையாளம்!
ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம்: பொதுமக்கள் அஞ்சலி!