கோவாக்ஸின் தடுப்பூசி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடுவதில் எந்தவித ஒப்புதலும் பனாரஸ் பல்கலைக்கழகம் பெறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான தடுப்பூசிகளை இந்தியா தயாரித்தது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திய 30 சதவீத பேருக்கு நரம்பியலில் பாதிப்பு, தோல் நோய், மூட்டு இணைப்பு, சதைப்பிடிப்பு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டு இருந்தது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவாக்ஸின் தடுப்பூசி குறித்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறப்படவில்லை.
கோவாக்ஸின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் பக்கவாதம், நரம்பியல் கோளாறு அல்லது மேல் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பாதகமான நிகழ்வுகளை அனுபவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வறிக்கை மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆய்வு முடிவுகளை திரும்பப் பெற வேண்டும்.
பனாரஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளில் ஐ.சி.எம்.ஆர். பெயரை நீக்க வேண்டும். இந்த அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால், சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து: பின்னணியில் இஸ்ரேலா?
IPL 2024: கிறிஸ் கெய்லிடம் கோலி வைத்த டிமாண்ட்!