ஹெலிகாப்டர் விபத்தில் காலமான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று (மே 21) பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லா உள்பட 9 பேர் பலியானார்கள். இப்ராஹிம் ரைசி மறைவு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவரது மறைவை ஒட்டி ஈரான் நாட்டில் 5 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியா, லெபனான், சிரியா, ஈராக், பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளும் இன்று துக்க தினம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளன.
இந்தநிலையில், தெப்ரீஸ் பகுதியில் இன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் கண்ணீர் மல்க அதிபருக்கு அஞ்சலி செலுத்தினர். பலரும் தங்களது கைகளில் ஈரான் நாட்டின் கொடி, அதிபரின் புகைப்படங்களை ஏந்தியும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக தெஹ்ரான், கூம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது. தெஹ்ரானில் நடைபெறும் ஊர்வலத்தின் போது சுப்ரீம் லீடர் அயோத்தெல்லா அலி காமேனி அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் மே 24-ஆம் தேதி இப்ராஹிம் ரைசியின் சொந்த ஊரான மசாத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சிஎஸ்கே அணியின் முதல் கேப்டன் நான் தான்… ஆனால்”- சுவாரஸ்யம் சொன்ன சேவாக்
மதுபோதையில் கார் ஓட்டிய சிறுவன்… இருவர் பலி… கட்டுரை எழுத சொன்ன நீதிமன்றம்!