uவாக்கு எண்ணிக்கை: கொரோனா பரிசோதனை கட்டாயம்!

politics

மே 2ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதிக்கு அனைவரும் காத்திருக்கின்றனர். 234 தொகுதிகளில் திமுக, அதிமுக , அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வாக்குப்பதிவு நடைபெறுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை இன்று(ஏப்ரல் 23) சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, “ திட்டமிட்டப்படி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் இருந்து குறைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் கூடுதலாக 20 சதவிகித பணியாளர்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட வேண்டும் என்பதால் அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் வாக்கும் எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும், ஏப்ரல் 28ஆம் தேதி பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

**வினிதா**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *