top ten news today in Tamil January 10 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

வைப்ரண்ட் குஜராத் சர்வதேச மாநாடு! top ten news today in Tamil January 10 2024

குஜராத் அகமதாபாத் காந்தி நகரில் இன்று (ஜனவரி 10) நடைபெறும்  வைப்ரண்ட் குஜராத் சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறார்.

போக்குவரத்து இரண்டாவது நாள் வேலைநிறுத்தம்!

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று இரண்டாவது நாள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

மணிமுத்தாறு அணை திறப்பு!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து  சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் மின்வாரிய தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர் ரிலீஸ்!

அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றைய புரோ கபடி லீக் போட்டிகள்!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில், யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 661-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மோதல்!

தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் போட்டியில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இளம் வயதிலேயே கரடுமுரடான முகம்: தீர்வு உண்டா?

ஸ்டிரைக்கை தொடர்ந்து அதிரடி போராட்டத்தை கையிலெடுத்த சிஐடியு

top ten news today in Tamil January 10 2024

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *