இளம் வயதிலேயே சிலருக்கு முகம் கரடுமுரடாக இருக்கும். சரும துவாரங்கள் பெரிதாக இருக்கும். வயதானவர்கள் போல காட்சியளிப்பார்கள்… இதற்கான காரணம் என்ன? தீர்வு உண்டா? beauty tips face
“நம்முடைய சருமத்தில் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸ் என இரண்டு லேயர்கள் இருக்கும். டெர்மிஸ் எனும் லேயரில் செபேஷியஸ் சுரப்பிகள் இருக்கும்.
சருமத்துக்குத் தேவையான எண்ணெய்ப் பசையைச் சுரப்பது இவைதான். இந்த செபேஷியஸ் சுரப்பிகளிலிருந்து சீபம் என்கிற திரவம் சுரக்கும்.
சருமத்தின் மேல் பகுதியில் நுண்ணிய துவாரங்கள் இருக்கும். இவை எல்லோருக்கும் இருக்கும். சிறு வயதில் இந்தத் துவாரங்கள் எல்லாம் டைட்டாக இருக்கும். சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் சுரப்பவர்களுக்கு, அதன் காரணமாக சருமத் துவாரங்கள் திறந்திருப்பது போலத் தெரியும்.
அளவுக்கதிமாக வெளியில் அலையும்போது முகத்தில் உள்ள சருமத்தின் அடியில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படும்.
இவைதான் நம்மை இளமையோடும், உறுதியோடும் வைத்திருப்பவை. சருமத் துவாரங்களைச் சுற்றியுள்ள கொலாஜென், எலாஸ்டின் குறைவதால் துவாரங்கள் திறந்ததுபோலத் தெரியும்.
சருமத்திலுள்ள கொலாஜெனையும் எலாஸ்டினையும் தூண்டிவிட சில சிகிச்சைகள் இருக்கின்றன. மைக்ரோ நீட்லிங், ரேடியோ ஃப்ரீக்வன்சி, ஸ்கின் டைட்டனிங் கார்பன் டை ஆக்ஸைடு லேசர், சருமத்துக்கு அடியில் போடப்படும் ஹைலுரானிக் ஊசி போன்றவை இதற்கு உதவும். அதன் மூலம் சருமத் துவாரங்கள் டைட் ஆகும்.
ரெட்டினால், சாலிசிலிக் அமிலம், கிளைகாலிக் அமிலம் கலந்த க்ரீம்கள் பயன்படுத்தினாலும் சருமத் துவாரங்கள் டைட் ஆகும்.
அதிகப்படியான வெயில், சூழல் மாசு, ஸ்ட்ரெஸ் காரணமாக சிலருக்கு சராசரியைவிட சீக்கிரமே முகம் முதுமைத் தன்மையை அடையும்.
அவர்களுக்கு கொலாஜென் உற்பத்தி இருக்காது. எனவே இந்தக் காரணிகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சரும மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சைகளைக் கேட்டுப் பின்பற்றுங்கள். இளமையுடன் பிரகாசிப்பீர்கள்” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜிவி பிரகாஷை இயக்கும் யூடியூப் பிரபலம்!
கிச்சன் கீர்த்தனா: கானங்கத்த மீன் புட்டு
டிஜிட்டல் திண்ணை: அதிமுக வேட்பாளர் பட்டியல் – எக்ஸ்க்ளுசிவ்!
beauty tips face