நீலகிரியில் கனமழை : வானிலை வார்னிங்!
நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 1) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
ஏப்ரல் 28 வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறார்.
சென்னை வர்த்தக மையத்தில் இன்று தமிழக அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (டிசம்பர் 9) சென்னை வருகிறார்.
மிக்ஜம் புயல் காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில் உருவாகும் புயல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று (நவம்பர் 18) கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
கேரளாவில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று (அக்டோபர் 30) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார்.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) ஆலோசனை நடத்துகிறார்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசிய கொடியேற்றுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 8) ஆரோவில்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் 107, மதுரை நகரம் 105, தூத்துக்குடி 104, கடலூர், ஈரோட்டில் தலா 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) மாலை 4 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது.
முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது.
மீனம்பாக்கம், கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை நீடித்து வருகிறது.