டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்!

தமிழ்நாடு – குஜராத் இடையிலான கலாச்சார பிணைப்பை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று(மார்ச் 19) சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா துவக்கி வைக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுக்கள் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

வேட்புமனு தாக்கல் நிறைவு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

பட்டமளிப்பு விழா!

தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை!

சென்னை கே.கே.நகரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

சூஃபி இசை கச்சேரி!

சினிமாவில் பணிபுரியும் லைட் மேன்களுக்கு உதவி செய்யும் வகையில் Wings of Love என்ற சூஃபி இசை கச்சேரியை ஏ.ஆர்.ரகுமான் இன்று சென்னையில் நடத்துகிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஹாக்கி போட்டி!

ராமநாதபுரத்தில் தென் மண்டல மாநிலங்கள் அளவிலான ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 302-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

’பத்து தல’ ரசிகர்கள் வெள்ளத்தில் சிம்பு

‘இனி அப்படி செய்யாதே’: சிராஜை எச்சரித்த ஷமி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.