விவிபாட் வழக்கில் இன்று தீர்ப்பு!
விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிட கோரிய வழக்கில் இன்று (ஏப்ரல் 24) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பிரச்சாரம் மாலையுடன் ஓய்கிறது!
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெப்ப அலை வீசக்கூடும்!
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வீட்டை விட்டு வெளியே போகாதீங்க!
வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோடை விடுமுறை ஆரம்பம்!
1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை அபர்ணா தாஸ் திருமணம்!
நடிகை அபர்ணா தாஸுக்கும், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ்நாட்டின் ரசிகர்களிடையே பிரபலமான தீபக் பரம்போலுக்கும் இன்று திருமணம் நடக்கவுள்ளது.
டெல்லி – குஜராத் அணிகள் மோதல்!
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 40-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.
’ஜிமிக்கி காசல்’ ரிலீஸ்!
கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தில் அடுத்த பாடலான ’ஜிமிக்கி காசல்’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
வடக்கன் டீசர் ரிலீஸ்!
வடக்கன் திரைப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 40-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பனானா ரோல்ஸ்
களத்தில் அதிரடி காட்டிய ஸ்டோனி்ஸ்… அதிர்ச்சியில் இருந்து மீளாத CSK ரசிகர்கள்!