Kitchen Keerthana: Banana Rolls

கிச்சன் கீர்த்தனா : பனானா ரோல்ஸ்

தமிழகம்

விடுமுறை நாட்களில் வீட்டைச் சுற்றி வலம்வரும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த பனானா ரோல். ஹெல்த்தியான இந்த பனானா ரோல்ஸ் அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.

என்ன தேவை?
கோதுமை மாவு – ஒரு கப்
பெரிய மஞ்சள் வாழைப்பழம் (அ) பச்சை வாழைப்பழம் – 3 (தோல் நீக்கி, 2 இன்ச் துண்டுகளாக்கவும்)
விரும்பிய பழக்கூழ் (மாம்பழம், கிவி, சப்போட்டா) – தலா கால் கப்
பொடித்த பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
பாதாம் எசென்ஸ் – சிறிதளவு
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் – மாவு பிசையத் தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
ஃப்ரெஷ் பேரீச்சைத் துண்டுகள் – தேவையான அளவு (அலங்கரிக்க)

எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் பொடித்த பாதாம், ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம் எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு பால்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். பிறகு சப்பாத்திகளை நீளவாக்கில் ரிப்பன்கள் போல துண்டுகளாக்கவும். ஒவ்வொரு சப்பாத்தி துண்டின் மீதும் மாம்பழக் கூழ், அடுத்து கிவி, அடுத்து சப்போட்டா பழக் கூழ் என வரிசையாகத் தடவவும். அதன் மீது ஒரு வாழைப்பழத் துண்டை வைத்து இறுக்கமாக ரோல் செய்யவும். பிறகு துண்டுகளை நிமிர்த்து வைத்து அவற்றின் மேல் ஃப்ரெஷ் பேரீச்சைத் துண்டுகளை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். பாதாம் ஃப்ளேவருடன் சப்பாத்தியும், பழ ஃப்ளேவரும் சேர்ந்து இந்த ரோல் சுவைக்க அமிர்தமாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

களத்தில் அதிரடி காட்டிய ஸ்டோனி்ஸ்… அதிர்ச்சியில் இருந்து மீளாத CSK ரசிகர்கள்!

தீப்பெட்டி இருக்கா? அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0