தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர்” விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 77வது சுதந்திர தின நிகழ்ச்சியில் வழங்கினார்.
அத்துடன், 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும் கி.வீரமணிக்கு வழங்கப்பட்டது. மேலும், டாக்டர்.ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் விருது முனைவர்.டபுள்யூ.பி. வசந்தா கந்தசாமி அவர்களுக்கும், கல்பனா சாவ்லா வருது முத்தமிழ் செல்விக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான ’தகைசால் தமிழர்’ விருது முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவும் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலை போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சுதந்திர தின விழா: கோட்டையில் கொடியேற்றினார் ஸ்டாலின்