நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) மூன்றாவது முறையாக தேசிய கொடி ஏற்றினார்.
முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். பின்னர், முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு சென்ற முதலமைச்சர் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சுதந்திர தின விழா: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
77 வது சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து!
இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தகவல்!