அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஷாருக்கான் மனைவி கவுரிகான் தயாரித்துள்ளார்.
இந்தி, தமிழ்,தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, அமிர்தா ஐயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘ஹையோடா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியில் இப்பாடல் ‘சலேயா’ என தொடங்குகிறது.
ஜவான் படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடலான ‘ஹையோடா’ பாடல் நேற்று வெளியாகியது.
தமிழில் இப்பாடலை அனிருத்தும், பிரபல பாடகி பிரியா மாலியும் பாடியுள்ளனர். பிரபல நடன இயக்குநரும் திரைப்பட இயக்குநருமான ஃபாரா கான், இந்தப் பாடலுக்கான நடனத்தை அமைத்துள்ளார்.
இந்தியில் ‘சலேயா’ (Chaleya) என்று தொடங்கும் பாடலை அர்ஜித் சிங்-ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ளனர். ரொமான்டிக் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் இந்தப் படத்துக்காக ரொமான்டிக் பாடலில் பங்கேற்றுள்ளார்.
திருமணத்திற்கு பின் நயன்தாரா காதல் டூயட் பாடலில் நெருக்கமாக நடித்துள்ள பாடல் காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, ஷாருக்கான் இடையேயான கெமிஸ்ட்ரி பாடலில் கை கொடுத்திருக்கிறது.
இந்தியில் சிறப்பாக இருக்கும் பாடல் காட்சி தமிழில் இப்பாடலுக்கான லிப் சிங் நான் சிங்காக மொழிமாற்று படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.
இராமானுஜம்
77 வது சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து!
“மணிப்பூர் மக்களுக்காக இந்தியா துணை நிற்கும்” – பிரதமர் மோடி
சிறப்புக் கட்டுரை: எல்லாவற்றுக்கும் காரணம் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தானா?