”கட்டிங் பிளேடு வைத்து பல்லைப் பிடுங்கினார்”- சஸ்பெண்ட் ஏஎஸ்பி மீது சரமாரி புகார்கள்!

அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் கஸ்டடி மரணத்துக்கு சற்றும் குறையாத சம்பவமாக இருக்கிறது இந்த பல் பிடுங்கப்பட்ட டார்ச்சர்

தொடர்ந்து படியுங்கள்

தயிர் பாக்கெட்டுகளில் இந்தி: ஸ்டாலின் கண்டனம்!

மேலும், வேண்டுமென்றால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய கடும் கண்டணத்தை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கே. டி. ராகவனை நலம் விசாரித்த ஸ்டாலின்

அப்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த  முன்னாள் பொதுச் செயலாளரான கே. டி. ராகவன் உடல் நலக்குறைவால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் முதலமைச்சருக்கு தெரியவந்திருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

’பிரதமர்’ ஸ்டாலின்: ஹெச்.ராஜா டங் ஸ்லிப்!

திமுக கட்சி, அமைச்சர்கள், குடும்பம் என எதுவுமே மு.க.ஸ்டாலின் கண்ட்ரோலில் இல்லை, திமுகவில் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை உள்ளது, அதானி குழுமத்தால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துள்ளது, ஒரு பொதுத்துறை வங்கியாவது பாதிக்கப்பட்டதா?, ராகுல்காந்தி எப்போதும் நல்ல மனநிலையுடம் பேச மாட்டார், ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்தால் எம்.பி பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டு உள்ளார்”என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மேலும், அந்த கடிதத்தில் மீன்பிடித் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், மீனவ சமூகத்தினரிடையே கடும் மனவேதனையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்ஜெட் – மின்மினிப் பூச்சியல்ல உதயசூரியன்: மு.க.ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம், தலைவர் கலைஞர் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம், மொழிப்போர்த் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம், தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு, தமிழர் பண்பாட்டுக் கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிப்பு.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதல்வர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 14 ) அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் […]

தொடர்ந்து படியுங்கள்

தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அரசின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9 ) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய தொழில்‌ நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் , விரைவில் […]

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் முதல்வருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு!

ஏற்கனவே, பிகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பிகார் மாநிலத்தவர்களிடம் சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

பருவம் தவறிய கனமழை…விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்!

இதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இதர பயிர்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளதெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர், 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 இலட்சம் வழங்க ஆணையிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்