வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களைகட்ட துவங்கியுள்ளது. இந்தநிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் இன்று (மார்ச் 24) ஹோலி பண்டிகை கொண்டாடினார்.
ராஜ்நாத் சிங்கின் நெற்றியில் ராணுவ வீரர்கள் திலகமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அனைத்து ராணுவ வீரர்களுக்கும் அவர் இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், “சியாச்சின் சாதாரண நிலம் அல்ல. இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் உறுதிப்பாட்டின் அசைக்க முடியாத சின்னமாகும். இது நமது தேசிய உறுதியை பிரதிபலிக்கிறது
டெல்லி நமது தேசிய தலைநகர் என்றால், லடாக் வீரத்தின் தலைநகரம். உங்கள் அனைவருடனும் ஹோலி பண்டிகை கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைகிறது.
நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன். உங்கள் குழந்தைகளை, பெற்றோரை, குடும்பத்தை பராமரிப்பது எங்கள் கடமை. அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
உங்கள் உடலையும் மனதையும் அர்ப்பணித்து இந்த நாட்டிற்காக நீங்கள் எவ்வளவு விடாமுயற்சியுடன் பாடுபடுகிறீர்களோ, அதே விடாமுயற்சியுடன் நமது அரசும் ராணுவ வீரர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக கூட்டணியில் கமல்ஹாசன்: தேர்தல் பிரச்சாரம் எப்போது?
சீட் கிடைக்காதது தான் காரணமா? – மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி பின்னணி!