தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.
யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, லக்கி மேன் உள்ளிட்ட பல படங்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
அடுத்ததாக விஷாலின் ரத்னம், சுந்தர்.C-இன் அரண்மனை 4, சூர்யாவின் கங்குவா, விஜய்யின் GOAT ஆகிய தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகர் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
இந்த படங்கள் மட்டுமின்றி மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “குருவாயூர் அம்பலநடையில்” என்ற படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது யோகி பாபு நடிக்கும் முதல் மலையாள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகும் “தி ராஜாசாப்” படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமன்றி ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ், ஜவான் போன்ற சில ஹிந்தி படங்களிலும் யோகி பாபு நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் யோகி பாபுவிற்கு ஒரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
பிரபல ஹிந்தி இயக்குனர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய ஹாரர் திரில்லர் படத்தில் நடிகர் யோகி பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் வெளியான “புல் புல்லையா 2” திரைப்படம் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “புல் புல்லையா 3” படத்தை அனீஸ் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் தான் நடிகர் யோகி பாபுவை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: இதயத்தைப் பலமாக்க இந்த உணவுகளைத் தவிருங்கள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: எப்படிப்பட்ட ஃபேஷன் ஆடைகள் கோடைக்கு உகந்தது?
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா